Yahweh Graced English
← எல்லாப் பாடல்களும்

தமிழ்

என் உயிரே, யாஹ்வேயை வாழ்த்து

Bless Yahweh, O My Soul

திருப்பாடல்கள் 103:1–14

எபிரேய மொழியிலிருந்து நேராக, தூய தமிழில் அமைந்த பாடல்.

யாஹ்வே நம் கோணல்கள் யாவையும் மன்னிக்கிறார்; நம் நோய்கள் யாவையும் ஆற்றுகிறார்; நம் வாழ்வைக் குழியிலிருந்து மீட்கிறார்.

நம் பிழைகளுக்கேற்ப நமக்குச் செய்யாமல், கிழக்கிருந்து மேற்கு தொலைவாய் இருப்பது போல் நம் மீறல்களை நம்மைவிட்டுத் தொலைவாக்குகிறார்.

தந்தை மைந்தர்மேல் கனிவது போல், தமக்கு அஞ்சுவோர்மேல் கனிகிறார்; நாம் புழுதி என்பதை நினைவில் கொள்கிறார்.

பாடல் வரிகள்

எடுப்பு (103:1–2)

என் உயிரே, யாஹ்வேயை வாழ்த்து!
என் உள்ளிருக்கும் யாவுமே, அவரது தூய பெயரை வாழ்த்துங்கள்!
என் உயிரே, யாஹ்வேயை வாழ்த்து!
அவர் வழங்கியவை யாவையும் மறவாதே!

103:3–5

உன் கோணல்கள் யாவையும் மன்னிப்பவர்
உன் நோய்கள் யாவையும் ஆற்றுபவர்
உன் வாழ்வைக் குழியிலிருந்து மீட்பவர்
தவறா அன்பும் கனிவும் முடிசூட்டுபவர்
உன் அணியை நன்மையால் நிறைவாக்குபவர்
உன் இளமையோ கழுகைப் போல் புதிதாகும்

எடுப்பு

என் உயிரே, யாஹ்வேயை வாழ்த்து!
என் உள்ளிருக்கும் யாவுமே, அவரது தூய பெயரை வாழ்த்துங்கள்!
என் உயிரே, யாஹ்வேயை வாழ்த்து!
அவர் வழங்கியவை யாவையும் மறவாதே!

103:6–8

யாஹ்வே நேர்மைச் செயல்களையும்
ஒடுக்கப்பட்டோர் யாவர்க்கும் தீர்ப்புகளையும் செய்கிறார்
மோஷேக்குத் தம் வழிகளை அறிவித்தார்
இஸ்ர'ஏல் மைந்தர்க்குத் தாம் நிகழ்த்தியவற்றை அறிவித்தார்
யாஹ்வே கனிவுள்ளவர், அவர் அருளுள்ளவர்
நெடும் பொறுமையானவர், தவறா அன்பு மிகுந்தவர்

103:9–11

அவர் இறுதிவரை கடிந்துகொள்ளார்
என்றென்றும் சினத்தை வைத்திரார்
நம் பிழைகளுக்கேற்ப நமக்குச் செய்யார்
நம் கோணல்களுக்கேற்ப நமக்கு வழங்கார்
நிலத்திற்கு மேல் வானங்கள் உயர்ந்திருப்பது போல்
தமக்கு அஞ்சுவோர் மேல் அவர் தவறா அன்பு ஓங்கும்

எடுப்பு

என் உயிரே, யாஹ்வேயை வாழ்த்து!
என் உள்ளிருக்கும் யாவுமே, அவரது தூய பெயரை வாழ்த்துங்கள்!
என் உயிரே, யாஹ்வேயை வாழ்த்து!
அவர் வழங்கியவை யாவையும் மறவாதே!

103:12–14

கிழக்கிருந்து மேற்கு தொலைவாய் இருப்பது போல்
நம் மீறல்களை நம்மைவிட்டுத் தொலைவாக்கினார்
தந்தை மைந்தர்மேல் கனிவது போல்
யாஹ்வே தமக்கு அஞ்சுவோர்மேல் கனிகிறார்
நம் வனைவை அவர் அறிவார்
நாம் புழுதி என்பதை நினைவில் கொள்வார்

எடுப்பு (×2)

என் உயிரே, யாஹ்வேயை வாழ்த்து!
என் உள்ளிருக்கும் யாவுமே, அவரது தூய பெயரை வாழ்த்துங்கள்!
என் உயிரே, யாஹ்வேயை வாழ்த்து!
அவர் வழங்கியவை யாவையும் மறவாதே!

குறிப்பு

அணி — இச்சொல்லைக் குறித்துப் பல அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு;

சில மொழிபெயர்ப்புகளில் "விருப்பம்" என்றும், "வாழ்நாள்" என்றும் உள்ளது.

ஆனால் நாங்கள் சொல்லின் நேர்ப்பொருளையே வைத்துள்ளோம்.